லக்னோ, பிப். 20 –

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே கலிந்தி விரைவு இன்று காலை ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரிலிருந்து அரியானா மாநிலம் திவானை நோக்கி சென்றுகொண்டிருந்த கலிந்தி விரைவு ரயில் ஃபிரோசாபாத் அருகே சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளானது. இன்று அதிகாலையில் நடந்த இந்த விபத்தில் கலிந்தி ரயிலின் முதல் பெட்டி தடம் புரண்டது. எனினும் பயணிகள் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் தடம் புரண்டதன் காரணமாக ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கான்பூர் வரும் ரயில்கள் காசியாபாத் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

அதேபோல் டெல்லி செல்லவேண்டிய ரயில்கள் ஆக்ரா வழியாக மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  இந்த விபத்தை ஏற்படுத்திய ரயில் ஓட்டுநர் உட்பட 3 ரயில்வே ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: