இம்பால், பிப். 18 –

அசாம் மாநிலம் தொபோலா தொகுதியில் , அம்மாநில முதலமைச்சரை எதிர்த்து போட்டியிடும் இரோம் சர்மிளா , இணையதளம் மூலமாக மக்களிடம் நிதி திரட்டி வருகிறார்.

மணிப்பூர் மாநிலம் தொபால் தொகுதியில் அம்மாநில முதலமைச்சர் இபோபி சிங்கை எதிர்த்து போட்டியிடுகிறார் இரோம் சர்மிளா. தேர்தலில் போட்டியிட தேவைப்படும் நிதிக்காக இவரது கட்சியினர் இணையதளம் மூலம் மக்களிடம் நிதி திரட்டி வருகின்றனர். மேலும் சைக்கிள் மூலம் சென்று மக்களிடம் பிரச்சாரம் நடத்தி வருகின்றனர். இது குறித்து அக்கட்சியின் தலைவர் இரோம் சர்மிளா, தேர்தலில் பணத்திற்கு உள்ள சக்தியை முடிவுக்கு கொண்டு வரவே , இணையதளம் மூலம் மக்களிடம் நிதி திரட்டுகிறோம். சைக்கிள் மூலமாக பிரச்சாரம் செய்வது உடல் நலத்திற்கு நல்லது. இதன் மூலம் என்னால் மக்களிடம் மிக சுலபமாக உரையாற்ற முடிகிறது என கூறினார்.
அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் இர்னான்ரோ , இணையதளம் மூலமாக மக்களிடம் தேர்தல் நிதி திரட்டுவதால் , எங்கள் தேர்தல் நிதி மிக வெளிப்படையாகவே உள்ளது. எங்களிடம் இருக்கும் ஒவ்வொரு ரூபாய்க்கும் கணக்கு உள்ளது. இதுவரை ரூ.4.5 லட்சம் தேர்தல் நிதி ஆக பெறப்பட்டுள்ளது.  மேலும் நாங்கள் சைக்கிள் மூலமாக சென்று பிரச்சாரம் மேற்கொள்வதால் , எங்களால் மக்களை மிக எளிதாக சந்திக்க முடிகிறது என கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.