சென்னை, பிப். 17 –

எண்ணூர் கடலில் கலந்துள்ள எண்ணெய் படலம் 20 நாட்களாகியும் முற்றிலுமாக அகற்றப்படாததால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

எண்ணூர் அருகே கப்பல்கள் மோதிக் கொண்டதில் கப்பலில் இருந்த கச்சா எண்ணெய் கடலில் கலந்தது. அதை அகற்றும் பணியில் ஏராளமானவர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் எஞ்சியுள்ள எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தற்போது விபத்துக்குள்ளான கப்பல் நிறுவனத்திடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது குறைந்த அளவு ஆட்களே பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதால் , பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் , 20 நாட்களாகியும் முற்றிலுமாக எண்ணெய் படலம் அகற்றப்படாததால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply