சர்வதேச பேட்மிண்டன் சம்மேளனம் வீரர்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் இந்திய வீராங்கனை சிந்து கடந்த முறையை விட ஒரு இடம் முன்னேறியுள்ளார்.

ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனைப் படைத்த பி.வி.சிந்து உலக தரவரிசைப் பட்டியலில் ஒரு இடம் முன்னேறி 5வது இடத்தைப் பிடித்துள்ளார். மற்றொரு வீராங்கனையான சாய்னா நேவால் 9வது இடத்தில் உள்ளார்.

தைவான் வீராங்கனை சூ-யிங் டாய் 84611 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். நீண்ட காலம் முதலிடத்தைப் பிடித்திருந்த சீனாவின் யு சன் 4வது இடத்திற்கும் ஸ்பெயின் வீராங்கனை மாரின் கரோலினா இரண்டாவது இடத்திற்கும் தள்ளப்பட்டனர்.

ஆண்கள் பிரிவில் மலேசியாவின் சொங் வெய் லீ தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார். முதல் 4 இடங்களுக்குள் இருந்த சீன வீரர்கள் டான் லன், லாங் சென், தியான் ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். இவர்கள் 5வது மற்றும் 6, 7வது இடங்களுக்கு தள்ளப்பட்டனர். இரண்டு மற்றும் மூன்றாவது இடங்களை டென் மார்க் வீரர்களும், 4வது இடத்தை கொரிய வீரரும் பிடித்துள்ளனர்.

 

Leave A Reply