இஸ்லாமாபாத், பிப். 17 –

பாகிஸ்தானில் தர்கா மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் சேவான் நகரில் உள்ள சூஃபி தர்காவில் வியாழனன்று தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 80 பேர் பலியாகினர். இதை தொடர்ந்து எடுக்கப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையில் 31 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. தர்கா அமைந்துள்ள சிந்து மாகாணத்தில் 18 தீவிரவாதிகளும் , வட மேற்கு பகுதியில் 13 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply