நியூசிலாந்து சென்றுள்ள தென்னாப்பிரிக்கா அணி ஒரே ஒரு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெள்ளிக்கிழமை(பிப்.17) விளையாடியது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
தென்னாப்பிரிக்காவின் துவக்க வீரர் டி காக் ஆட்டத்தின் 3வது ஓவரின் 4வது பந்தில் ரன் கணக்கை துவக்காமலேயே வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான ஹசிம் அம்லா மிக சிறப்பாக விளையாடி 62 ரன்கள் குவித்தார்.
கேப்டன் டு பிளிஸ்சிஸ், டி வில்லியர்ஸ், டுமினி ஆகியோர் அதிரடியாக ரன் குவிக்க அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது.
அதனைத் தொடர்ந்து களம் இறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 14.5 ஓவரில் 107 ரன்களில் சுருண்டனர். இதனால் தென்னாப்பிரிக்கா அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
உலக தர வரிசைப் பட்டியலில் பந்து வீச்சாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ள இம்ரான் தாஹிர் 24 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டை அள்ளி ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

 

Leave A Reply