ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. அதற்கு முன்பாக ஆஸ்திரேலிய அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணியுடன் விளையாடுகிறது.
வெள்ளிக்கிழமை(பிப்.17) துவங்கிய இந்தப் பயிற்சி ஆட்டம் மும்பை மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய ‘ஏ’ அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்டியா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
வார்னர் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாண்டியா பந்து வீச்சில் இஷான் கிஷானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்மித், மார்ஷ் இருவரும் சதம் விளாசினர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அந்த அணி 5 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்துள்ளது. நவ்தீப் சைனி இரண்டு விக்கெட் வீழ்த்தினார்.

 

Leave A Reply