அதிகாரச் சண்டையின் அப்பட்டமான காட்சிகளைக் கடந்த 9 நாட்களாகக் கண்டுவந்த தமிழக அரசியல் களத்தில் தற்போதைக்குப் புழுதி அடங்கியிருக்கிறது. அதிமுக சட்டமன்றக்குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த அதன் தற்காலிகப் பொதுச்செய லாளர்
சசிகலா, சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலை
யில், எடப்பாடி கே.பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, வியாழனன்று (பிப்.16) அவரது தலைமை
யிலான அமைச்சரவை பொறுப்பேற்றிருக்கிறது. 15 நாட்களுக்குள் சட்ட மன்றத்தில் தனக்குள்ள பெரும்பான்மையை அவர் நிரூபித்தாக வேண்டும் என பொறுப்பு ஆளுநர்
வித்யாசாகர் ராவ் ஆணையிட்டிருக் கிறார். சசிகலாவை எதிர்த்துக் கிளம்பி, அதிமுக-வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட, இடைக்கால முதல்வராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், தனது ‘தர்மயுத்தம்’ தொடரும் என்பதாக அறிவித்திருக்கிறார்.

அதிமுக அரசின் பதவியேற்பு என்பது மகிழத்தக்க ஒன்றாக நடைபெறவில்லை. முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவு அதைத் தொடர்ந்து முதல்வராக தேர்வு செய்யப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் தாம் மிரட்டப்பட்டதாக பகிரங்கமாக கூறியது. ஊழல் வழக்கில் தீர்ப்பை எதிர்நோக்கி இருந்த சசிகலா முதல்வராவதற்கு காட்டிய அவசரம் போன்றவை ஊடகப் பரபரப்புக்கு உதவியிருக்கலாமேயன்றி, தமிழகத்தின் தார்மீக வீழ்ச்சியையே காட்டியது.

குழப்பமான சூழலில் பெரும்பான்மை யாருக்கு இருக்கிறதோ அவரை ஆட்சியமைக்க அழைக்காமல், ஆளுநர் காட்டிய தாமதம் உள்நோக்கம் கொண்டது. தமிழக ஆளுங்கட்சி
க்குள் வலுவான தலைமையில்லாத நிலைமையைப் பயன்படுத்தித் தனது நோக்கங்களுக்கு ஏற்ற அரசு நிர்வாகத்தைக் கட்டுப்படுத்த அக்கட்சி கூச்சமே இல்லாமல் முயன்றது. சசிகலா
அணியிலிருந்து பெரும்பாலோரை ஓபிஎஸ் அணியால் இழுக்க முடியாது என்ற
நிலையில்தான், இறுதியில் ஆளுநர் இந்த முடிவை எடுத்தார் என்பது கண்கூடு. ஆயினும்
வரும் நாட்களில் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள பாஜக முயலும் என்பதை நிராகரித்துவிட முடியாது. சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க இத்தனை நாட்கள் அவகாசம் தரப்பட்டிருப்பது, அருவருக்கத்தக்க பேரங்களுக்கு இட்டுச்செல்லக்கூடும்.

சட்டமன்றத் தேர்வில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றிபெற்று ஆட்சி நிலைபெறுமானால், உடனடியாக அரசு கவனம் செலுத்த வேண்டிய பல முக்கியமான பிரச்சனைகள் கவனிக்கப் படாமல் விடப்பட்டிருக்கிற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். ஊழல் வழக்கின் முதல் குற்றவாளி என்ற நிலையிலிருந்து, கட்சியின் மிகப்பெரிய ஆளுமையாக இருந்த ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுவிடவில்லை என்ற நிலையில், இவரது ஆட்சியின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்களின் தணிக்கைக்கு உள்ளாகும்.
ஏற்கெனவே அதிமுக ஆட்சியில் அரங்கேறிய அத்துமீறல்கள், எங்கும் எதிலும் தங்குதடையற்ற ஊழல் தாண்டவங்கள், ஏதோ சில இலவசங்களை வீசிவிட்டால் போது
மென்று கருதி மக்களுக்கு பதிலளிக்கிற கடமைப் பொறுப்பிலிருந்து விலகிய அலட்சியங்கள் போன்றவை இனி தொடர முடியாது என்ற புரிதலுடன் நிர்வாகம் நடைபெற வேண்டும்.

Leave A Reply