கவுகாத்தி , பிப். 15 –

மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட பஜாக தனக்கு ரூ. 36 கோடி தருவதாக கூறினர் என இரோம் சர்மிளா முன் வைத்துள்ள குற்றச்சாட்டை அடுத்து , இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் , மூன்று முறை அம்மாநிலத்தில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஓக்ரம் ஐபாபி சிங்கை எதிர்த்து தொபால் தொகுதியில் போட்டியிட போவதாக இரோம் சர்மிளா தெரிவித்திருந்தார். இந்நிலையில் , அவர் தனது 16 ஆண்டுகால போராட்டத்தை முடித்து கொண்டு சமயம் , அப்பகுதி பஜாக கட்சி பிரமுகர் ஒருவரை தன்னை சந்தித்து , தேர்தலில் போட்டியிட எனக்கு பஜாக தலைமை ரூ.36 கோடி தருவதாக கூறினார் என குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து , இது தொடர்பாக காங்கிரஸ் தரப்பு தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பஜாக தரப்பு , சர்மிளா கூறுவதை நிரூபிக்க வேண்டும் இல்லையேல் அவர் மீது போடப்படும் அவதூறு வழக்கை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என கூறியுள்ளது.

பஜாக தலைவர் ராம் மாதேவ் , சர்மிளா கூறுவது அனைத்தும் பொய் , அதுமட்டுமல்லாமல் , மணிப்பூரின் ஒட்டுமொத்த தேர்தல் பிரசாரத்திற்கு இவ்வளவு செலவு ஆகாது என கூறியுள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.