தில்லி: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலித்தா சசிகலா உள்ளிட்ட 4 பேர்  மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை (செவ்வாயன்று) காலை 10:30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் 1991 முதல் 1996-ஆம் ஆண்டு வரை முதல்வராக ஜெயலலிதா இருந்த போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 1996-ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தண்டனை விதித்து பெங்களூரு நீதிமன்ற நீதிபதி குன்கா கடந்த ஆண்டு தீர்ப்பு அளித்தார்.
பின்னர்,  இந்த தீர்ப்பிற்கு எதிராக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி குமாரசாமி ஜெயலலித்தா உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதனைத்தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து வழக்கு நடைபெற்ற மாநிலம் என்ற முறையில் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.  இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.  இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரணை நடத்தி முடிக்கப்பட்டு தீர்ப்பு 1 வாரத்தில் அளிக்கப்படும் என் கடந்த வாரம் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் செவ்வாயன்று (நாளை பிப் 14) காலை 10:30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படும் என  உறுதிப்படுத்தப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply