நீலகிரி: நீலகிரியில் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள தமிழக-கேரள எல்லையான தாளூரில் வசித்து வருபவர் நாகப்பன். இவர் மாங்காடு கிராமப்பகுதியில் பணிக்காக சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் சுற்றி திரிந்த காட்டுயானை நாகப்பனை தாக்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்து வனத்துறையினர் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

Leave A Reply