தில்லி: உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் தேர்வை நடத்தி இந்திய ரயில்வேதுறை சாதனைபடைத்துள்ளது.
இந்திய ரயில்வே துறையில் இளநிலை அளவிலான குரூப்-3 தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. இதில் 18 ஆயிரத்து 252 காலி பணியிடங்களுக்கு 92 லட்சம் பேர் விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் 2.73 லட்சம் பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்பட்டு ஆன்லைன் மூலம் முதற்கட்ட தேர்வு நடத்தப்பட்டது. இதன் மூலம் உலகிலேயே மிகப்பெரிய ஆன்லைன் தேர்வை நடத்தியுள்ளதாக  இந்திய ரயில்வே துறை தெரிவித்துள்ளது.  இதற்கு முன்னரெல்லாம், கைப்பட எழுதும் தேர்வு முறைதான் பின்பற்றப்பட்டது. சில முறைகேடுகள் இந்த பழைய முறையில் ஏற்படவே, ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது என்று ரயில்வே துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இந்திய ரயில்வே துறையில் 13 லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர். இருப்பினும் இன்னும் 2 லட்சம் பணி இடங்கள் காலியாக உள்ளதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

free wordpress themes

Leave A Reply