சென்னை, பிப். 12 –
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மைத்ரேயன் எம்.பி. ஞாயிறன்று மாலை, திடீரென ஆளுநர் வித்யாசாகர் ராவைச் சந்தித்துப் பேசினார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் – அதிமுக பொதுச்செயலாளர் வி.கே. சசிகலா தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுபட்டுள்ளது. முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தமக்கு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க அனுமதி தர வேண்டும் என ஆளுநரிடம் வலியுறுத்தியுள்ளார். அதிமுக எம்எல்ஏ-க்களின் ஆதரவு தனக்கே முழுமையாக உள்ளதால் தம்மையே ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என சசிகலாவும் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால், 3 நாட்களாகியும் ஆளுநர் யாரையும் ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.
இதனிடையே ஆளுநர் வித்யாசகர் ராவை, ஓ. பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான மைத்ரேயன் எம்.பி. ஞாயிறன்று மாலை, திடீரென ஆளுநரைச் சந்தித்து பேசினார்.
முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அளித்த தகவல்களை நேரில் தெரிவிக்கவே மைத்ரேயன் ஆளுநர் வித்யாசகர் ராவை சந்தித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave A Reply

%d bloggers like this: