புதுதில்லி,

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பண மதிப்பிழப்பு மசோதா சட்ட விரோதம் என்று மக்களவையில் எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இன்று மக்களவையில் முஸ்லிம் லீக் கட்சியின் மறைந்த எம்.பி இ.அகமது குடும்பத்தை அரசு அவமதித்து விட்டதாகவும், அது குறித்து விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் நோட்டிஸ் கொடுத்திருந்தது. ஆனால் மக்களவை கூடியதும் அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் கேள்வி நேரத்தை தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கங்கிரஸ் உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர். இதனையடுத்து அவையை ஒத்தி வைக்க நேரிட்டது. பின்னர் அவை கூடிய போது பணமதிப்பிழப்பு தொடர்பான மசோதா அவையில் தாக்கல் செய்யப்பட்டது. பணமதிப்பு ரத்து என ரிசர்வ் வங்கி தான் அறிவிக்க வேண்டும். பிரதமர் அறிவித்தது சட்டவிரோதம் என திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் சவுகத் ராய் குற்றம்சாட்டினார். இதற்கு நிதி அமைச்சர் அருண்ஜேட்லி விளக்கமளித்தார். இந்த மசோதா சட்டவிரோதம் என எதிர்கட்சிகள் முழக்கமிட்டதால் அவையை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது. பின்னர் அவை கூடிய போதும் சாரதா சிட்ப்ணட் வழக்கில் திரிணாமுல் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதற்கு சவுகத் ராய் கண்டனம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து குழப்பம் நீடித்ததால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.

Leave A Reply