தில்லி: குடியரசு தலைவர் மாளிகையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தலைநகர் தில்லியில் குடியரசு தலைவர் மாளிகை உள்ளது. இந்த கட்டிடத்தில் குடியரசு தலைவரின் அலுவலகமும் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இங்கு வெள்ளியன்று அக்கவுண்ட் பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக தீயை அணைத்தனர். இந்த விபத்தில் மரப்பொருட்கள் மட்டும் எரிந்ததாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என பாதுகாப்பு துறையினர் தெரிவித்தனர். மேலும் இந்த தீ விபத்து தொடர்பாக நடத்தப்பட்ட முதல்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

free wordpress themes

Leave A Reply