சண்டிகர், பிப். 01 –

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் 3 பேர் பலியாகினர்.

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 4 ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து 200கி.மீ., தொலைவில் உள்ள மாருர் மண்டிர் என்ற பகுதியில் செவ்வாயன்று இரவு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது , கூட்டத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் சிறுமி உட்பட 3 பேர் பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.