சண்டிகர், பிப். 01 –

பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரச்சார கூட்டம் அருகே நடந்த கார் குண்டு வெடிப்பில் பலியானோரின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் இருந்து 200கி.மீ., தொலைவில் உள்ள மாருர் மண்டிர் என்ற பகுதியில் செவ்வாயன்று இரவு காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. அப்போது , கூட்டத்திற்கு அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் சிறுமி உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதையடுத்து பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: