சென்னை,
நீட் தேர்வு எதிராக தமிழக அரசு கொண்டு வந்த மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வில் இருந்து விலக்கு பெறும் மசோதா, தமிழக சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த சட்ட முன் வடிவு தமிழக சட்டப் பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொண்டுவந்த மசோதாவின்படி, தமிழகத்தில் நீட் தேர்வின்றி, பிளஸ்-2 கட் ஆஃப் மதிப்பெண் படி மாணவர் சேர்க்கை நடத்த வழிவகை செய்யப்படும்.

Leave A Reply

%d bloggers like this: