2000 ரூபாய் கள்ள நோட்டுகள்

2000 ரூபாய் கள்ள நோட்டுகள் இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் கைப்பற்றப்பட்டுள்ளன. அசல் நோட்டுகளில் இருக்கும் பெரும்பாலான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் இந்த நோட்டுகளின் தாளும், மையும் மட்டுமே அசல் நோட்டுகளை விட குறைந்த தரத்தில் இருக்கின்றன. மற்றபடி, ரிசர்வ் வங்கி புதிய நோட்டில் அறிமுகப் படுத்திய 17 பாதுகாப்பு அம்சங்களில் பாதிக்குமேல் இந்த கள்ள நோட்டுகளிலும் இருக்கின்றன. இதில் கண்பார்வை இல்லாதவர்களுக்காக உருவாக்கப்பட்ட இரண்டு அம்சங்களும் அடங்கும். சந்திராயன், மொழிகளின் பட்டியல், ஸ்வச் பாரத் திட்டத்தின் சின்னம், நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடம், தேவநாகரியில் எழுதப்பட்டிருக்கும் நோட்டு மதிப்பு, ரிசர்வ் வங்கி கவர்னரின் உறுதி மொழி ஆகியவற்றை கள்ள நோட்டு அச்சடித்தவர்கள் நன்றாகவே காப்பியடித்துவிட்டனர். போலி 500 ரூபாய் நோட்டுகளும் வந்துவிட்டன.

செல்லா நோட்டு நடவடிக்கை அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்குள்ளேயே கள்ள நோட்டுகள் வந்திருப்பது அதிகார மையங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கள்ள நோட்டுகளைக் கண்டுபிடிப்பது செல்லா நோட்டு நடவடிக்கையின் பிரதான நோக்கங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்ட போதே, புதிய நோட்டுகளின் போலியை உருவாக்க அதிக நேரம் ஆகாது விஷயம் தெரிந்தவர்கள் எச்சரித்தனர். ஆனால் நம் நாராயணன்கள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாயிற்றே. கேட்க வில்லை.

-vijayasankar ramachandran

Leave a Reply

You must be logged in to post a comment.