நாமக்கல், ஜன.31-
நாமக்கல் நகரமே அன்றைய தினம் விழா கோலமாக திகழ்ந்தது. எங்கு காணினும் இளம் மாணவர் களின் தலைகள். ஜனவரி 29 ஞாயிறன்று காலை முதலே விடுதி மாணவர் மாநில மாநாட்டுக்கு மாநிலம் முழுவதும் இருந்து மாணவர்கள் நாமக்கல் நகருக்குள் வரதொடங்கினர். ஆயிரக்கணக்கான மாணவர்கள் பேரணியாய்ச் சென்று மாநாட்டைத் தொடங்கினர். பேரணியை சமூக செயல்பாட்டாளர் கா.மு.காளியப்பன் தொடக்கிவைத்தார்.

நேதாஜி சிலைக்கு மலை அணிவித்து புறப்பட்ட பேரணி பூங்கா வழியாக மாநாட்டு மண்டபத்தை அடைந் தது. அங்கு இந்திய மாணவர் சங்கத் தின் வெண்கொடியை மாநில செயற் குழு உறுப்பினர் சுரேஷ் பாண்டி ஏற்றிவைத்தார். வரவேற்பு குழு செயலாளர் டி.சரவணன் வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை மாநில குழு உறுப்பினர் இளையமதி முன் மொழிந்தார். மாநாட்டை வாழ்த்தி மாநிலத் தலைவர் வீ. மாரியப்பன் வாழ்த்துரை நிகழ்த்தினார்.மாநாட்டை வாழ்த்தி தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல்ராஜ் சிறப்புரை நிகழ்த்தினார்.விடுதி மாணவர் பிரச்சனைகள் குறித்த விரிவான அறிக்கையை மாநிலதுணைத் தலைவர் ஏ.டி.கண்ணன் முன்வைத்தார். மாநிலம் முழுவதும் இருந்து வந்திருந்த பிரதிநிதிகள், அறிக்கையின் மீதும், தமிழகம் முழுவதும் உள்ள மாணவர் விடுதிகளில் நிலவும் பிரச்சனைகள் குறித்தும் பேசினார்கள்.

தமிழகம் முழுவதும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப் பட்டோர் மற்றும் சீர்மரபினர், சிறுபான்மையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான விடுதிகள், உண்டுஉறைவிடப்பள்ளி விடுதிகள் என மொத்தம் 3,018 விடுதிகள் உள்ளன. இந்த விடுதிகளில் 2 லட்சத்து 16 ஆயிரத்து 68 மாணவ- மாணவியர்கள் தங்கி கல்விப் பெற்று வருகிறார்கள். முற்றிலும் ஏழை – எளிய, கிராமப்புற மாணவர்கள் தான் இந்த விடுதிகளில் தங்கியுள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து விடுதிகளிலுமே போதுமான அடிப் படை வசதிகள் இல்லாத நிலை நீடிக்கிறது. சுகாதாரம் இல்லை; வழங்கப் படும் உணவு தரமில்லாமல் மோசமாக உள்ளது. உணவுக்காக அரசு வழங்கும் தொகை மிகவும் சொற்பமே. பள்ளி மாணவர்களுக்கு நாளொன்றுக்கு ஒரு மாணவருக்கு ரூ.25.16ம், கல்லூரி மாணவர்களுக்கு தலா ஒரு நபருக்கு ரூ.29.16ம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. இத்தகைய பின்னணியில் தமிழக அரசு விடுதி மாணவர்களின் உணவு படியை உயர்த்தி தரமான உணவு வழங்க வேண்டும் என்றும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட வேண்டும் என்றும் விடுதி மாணவர்களின் பிரதிநிதிகள் தங்களது உள்ளக்கு முறல்களை வெளிப்படுத்தி கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன் அடிப்படையில், விடுதி மாணவர்களுக்கு அரசு அறிவித்துள்ள நலத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக மாணவர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; அரசு அறிவித்துள்ள உணவுப் பட்டியலில் உள்ளபடி தரமான உணவு வழங்குவதற்கு ஏற்றாற்போல் உணவுக்காக செலவிடப்படும் கட்டணத்தை குறைந்தபட்சம் இரண்டு மடங்காக உயர்த்திட வேண்டும். மேலும் உணவுப் பட்டியலில் உள்ளவாறு உணவு வழங்குவதற்கு அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்.விடுதி மாணவர்களுக்கு சுத்தமாக குடிநீர், குளியலறை மற்றும் கழிப்பறை சுற்றுச்சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும். பெருகி வரும் மாணவர் எண்ணிக் கைக்கு ஏற்ப புதிய விடுதிகள் உருவாக்கப்பட வேண்டும். விண்ணப் பிக்கும் தகுதியுடைய அனைவருக்கும் விடுதியில் இடமளிக்க வேண்டும். கல்வி நிலையங்கள் அதிகம் உள்ளமற்றும் அனைத்து மாவட்ட தலை நகரில் கூடுதல் எண்ணிக்கையிலான பள்ளி, இளங்கலை, முதுகலை கல்லூரி மாணவர் மற்றும் மாணவியர் விடுதிகள் உடனடியாக உருவாக்கப்பட வேண்டும்; விடுதிக்காப்பாளர், சமையலர் மற்றும் துப்புரவாளர் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

வாடகை கட்டிடங்களில் இயங்கும் விடுதிகளுக்கு அரசு கட்டிடங்கள் கட்டித் தர வேண்டும். கட்டப்பட்டு திறக்காமல் இருக்கக் கூடிய விடுதிகள் உடனடியாக திறக்கப்பட வேண்டும்; அரசு நலவிடுதி மாணவர்களுக் காக வழங்கப்படும் தொகையில் முறைகேட்டில் ஈடுபடும் அதிகாரிகள், விடுதி காப்பாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; விடுதிகளில் மாணவர் பேரவை, நூலகவசதி, உடற்பயிற்சி கூடம், இணையதள கணினி வசதி ஆகியவற்றை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழகஅரசை வலியுறுத்தி மாநாடு தீர்மானங்களை நிறைவேற்றியது. பின்னர் புதிய விடுதி மாணவர்கள் உபகுழு தேர்வு செய்யப்பட்டது. மாநில கன்வீனராக ஏ .டி .கண்ணன் மற்றும் துணை கன்வீனர்களாக எஸ்.இளையமதி மற்றும் பரமசிவம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். பின்பு மாநாட்டை நிறைவு செய்து மாநிலச் செயலாளர் பி.உச்சி மாகாளி உரையாற்றினார்.வரவேற்புக் குழு உறுப்பினர்க ளுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்ட பின்பு மாவட்ட தலைவர் எம்.வெற்றிவேல் நன்றி கூறினார்.

(ந.நி)

Leave A Reply