தில்லி , ஜன. 31 –

நாட்டின் பொருளாதார வளர்ச்சி படுபாதாளத்தில் சென்று கொண்டிருக்கும் இந்த வேலையில் மீண்டும் விமான போக்குவரத்து, வங்கி, உரம் என அனைத்தும் தனியார் மயமாக்கும் பணி தீவிரப்படுத்தப்படும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்தியப் பொருளாதார தலைமை ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியன், இந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதன் சுருக்கம் வருமாறு :

பண ஒழிப்பு, எண்ணெய் விலை உயர்வு, சர்வதேச சந்தையில் நிலவும் இறுக்கமான சூழல் போன்றவை இந்திய வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன.

* இரண்டு பெரிய காரணிகள் நம் பொருளாதாரத்தை பாதித்துள்ளன. ஒன்று பண ஒழிப்பு… இன்னொன்று அமெரிக்க அதிபர் தேர்தல்.

* நாட்டின் தொழில் வளர்ச்சி விகிதம் 7.4 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாகக் குறையும்

* இந்தியாவின் மொத்த உற்பத்தி – வர்த்தக (Commodity and Services) விகிதம் சீனாவை மிஞ்சிவிட்டது

* பண ஒழிப்பால் குறுகிய காலத்தில் பெரிய அளவில் பலன் இல்லை. நீண்ட காலத்தில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

* பண ஒழிப்பின் பாதிப்பு பிப்ரவரி மாதத்திலேயே நீங்கிவிடும் என்பது தவறு. ஏப்ரல் 2017-ல் ஓரளவு நீங்கும்.. டிசம்பரில்தான் சகஜமாகும்.

* பண ஒழிப்பு காரணமாக பெரிய நிறுவனங்கள் மற்றும் குடும்பங்களின் வாங்கும் திறனில் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. தங்களின் நிகழ்கால கொள்முதல்களை அவர்கள் தள்ளிப் போட்டுள்ளனர்.

* நாட்டின் மொத்த உற்பத்தியில் 0.75 சதவீத பாதிப்பு ஏற்பட்டாலும், உலகில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் நம்முடையதுதான்.

* நாட்டின் 8 முக்கிய நகரங்களில் வீழ்ச்சியடைந்துள்ள ரியல் எஸ்டேட் தொழில் மேலும் வீழ்ச்சியடையும்.

* பெட்ரோலியப் பொருட்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக மானியங்களைக் குறைத்துள்ளது அரசு. அது தொடர வேண்டும்.

* இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை இந்த ஆண்டும் தொடர்கிறது. 2013-14-ல் 4.5 சதவீதமாக இருந்த இந்த பற்றாக்குறை, 2016-17-ல் 3.5 சதவீதமாக உள்ளது.

* உணவுப் பொருள்கள், தானியங்களின் விலைதான் உணவுப் பணவீக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது.

*2016 ஏப்ரல் முதல் டிசம்பர் வரை மொத்த விலைக குறியீட்டெண் பணவீக்கம் 2.9 சதவீதமாக உள்ளது.

* 2016- 17 சேவைத் துறை வளர்ச்சி 8.9 சதவீதமாக இருக்கும்.

* 2016-17 வேளாண்மைத் துறையில் 4.2 சதவீத வளர்ச்சி இருக்கும். கடந்த 2015-16-ல் இது வெறும் 1.2 சதவீதமாக இருந்தது.

* 2018-ல் வட்டி வீதம் குறைக்கப்பட்டால், அது பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் தருவதாக இருக்கும்.

* நிலங்கள், ரியல் எஸ்டேட் போன்றவற்றை ஜிஎஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும்.

* அந்நிய நேரடி முதலீட்டில் 29 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. 2016-17-ல் $ 21.3 பில்லியன் முதலீடு கிடைத்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலை நீடித்தால் ஏற்றுமதி பாதிக்கப்படலாம், மேலும் எதிர்பார்ப்பிற்கு மாறாக கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால் நுகர்வு பாதிக்கப்படவும் வாய்ப்புள்ளது. அனைத்தை விடவும் கவலையளிக்கக் கூடியது மேற்கூறிய இரண்டு காரணங்களோடு அந்த இரண்டு காரணங்களுமே சேர்ந்து நிகழ்ந்தால் பாதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம்.

2015-16 நிதியாண்டில் இது வரை இந்தியப் பங்குச்சந்தை மந்தமாகவே இருந்து வருகிறது. ஜனவரி 5, 2016 வரை பி.எஸ்.இ. குறியீடான சென்செக்ஸ் 8.5% சரிவு கண்டுள்ளது.

இந்தியச் சந்தையில் அயல்நாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் நிகர முதலீடு 2015-ம் ஆண்டில் ரூ.63,663 கோடியாகக் குறைந்துள்ளது. இது 2014-ம் ஆண்டில் ரூ.2,56,213 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.