திருப்பூர்: திருப்பூரில் மகளையே பாலியல் பலாத்காரம் செய்த தந்தை மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த தாய்க்கு தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் நெருப்பெரிச்சல் பகுதியை சேர்ந்தவர் ராஜசேதுபதி. இவர் கடந்த 2015-ஆம் ஆண்டு தனது 8 வயது மகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி வந்துள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி தனது பள்ளி அசிரியரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து பள்ளி ஆசிரியர் குழந்தைகள் பாதுகாப்பு மையம் மூலமாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தந்தை குழந்தைக்கு பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது. இதனை தாய் இந்திரா வேடிக்கை பார்த்தது தெரியவந்தது. இந்த வழக்கு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி, தந்தை ராஜ சேதுபதிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்பளித்தார். மேலும், உடந்தையாக இருந்த தாய் இந்திராவுக்கும் தலா 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், குற்றத்தை மறைத்ததற்காக 6 மாத தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

free wordpress themes

Leave A Reply