பனாஜி, ஜன. 29 –

தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , கோவாவில் நடத்திய தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோவா  மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்  ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கோவா மாநிலத்தில் வரும் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதன் காரணமாக பல்வேறு அரசியல் கட்சிகள் அம்மாநிலத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.அங்கு ஆம் ஆத்மி கட்சி சார்பாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் , வாக்காளர்களிடம் பாஜக , காங்கிரஸ் கட்சிகளிடம் இருந்து பணம் பெற்றுக்கொள்ளுங்கள் , ஆனால் ஆம் ஆத்மிக்கு ஓட்டு போடுங்கள் என பிரசாரம் செய்துள்ளார். இது குறித்து அப்பகுதி பாஜக கட்சியினர் கெஜ்ரிவால் மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தனர்.

புகாரை அடுத்து , கெஜ்ரிவால்  நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் தேர்தல் விதிமுறைகளை மீறியதாக கூறி கெஜ்ரிவால் மீது வழக்கு பதிவு செய்ய கோவா மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: