தூத்துக்குடி, ஜன. 29-
தமிழக அரசின் கோரிக்கை களுக்கு மத்திய அரசு செவி சாய்ப்பதில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டினார்.
திருச்செந்தூரில் நடைபெறும் முத்துக்குமார் நினைவஞ்சலி கூட்டத்திற்கு வருகை தந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் தூத்துக்குடி வந்தார். கொடியேற்று விழா மற்றும் அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டார். தூத்துக்குடி தென்பா கம் காவல் நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அவர் பின்னர் செய்தியாளர்களி டம் பேசினார். அவர் பேசும் போது, கேரள அரசு அணைகள் கட்டி தமிழ கத்திற்கு வரும் நதிநீரை தடுத்து வருகிறது.

இது குறித்து தமிழக மேற்கு மாவட்ட விவசாயிகளின் கோரி க்கைகளுக்கு மத்திய அரசு இது வரை செவிசாய்க்கவில்லை. இதனால் வறட்சியில் வாடும் மேற்கு மாவட்ட விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரி ழந்துள்ளனர். தமிழக அரசு வறட்சி நிவாரணமாக 35 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டு மத்தியஅரசுக்கு கோரிக்கை மனு கொடுத்தும் இது வரை வறட்சி நிவாரணம் குறித்து எவ்வித நடவடிக்கையும் இல்லை. வர்தா புயல் நிவாரண நிதியும் இது வரை மத்திய அரசால் வழங்கப்படவில்லை. தமிழக அரசின் கோரிக்கை களுக்கு மத்திய அரசு செவி சாய்ப்ப
தில்லை. ஜல்லிக்கட்டு பிரச்சனை யில் மக்கள் முன்னின்று போராட் டம் நடத்தியதால் மத்திய அரசு செவி சாய்த்துள்ளது. 6 நாட்கள் மக்கள் போராட அனுமதி அளித்த காவல்துறை 7வது நாள் அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டதில் உள்நோக்கம் உள்ளது. மோடியையும் பன்னீரையும் விமர்சனம் செய்ததால் அடக்குமுறையை காவல்துறை செய்ததா ?

இளைஞர்கள் தேசிய கொடியை அவமதித்ததால் போராட்டத்தை நிறுத்தினார்கள் என்றால் பிரதமர் தேசியக் கொடியால் முகம் துடைத் தார். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தலித்துகள் மீதான ஜாதிய அடக்கு முறையை கண்டித்து வரும் பிப்ரவரி 2ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதாக பிஜேபி அரசு அறிவித்துள்ளது. ஒவ்வொரு தேர்தலின் போதும் பாரதிய ஜனதா மதவாதத்தை தூண்டி இந்து, இஸ்லாமியர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: