‘அமெரிக்கா உருவான காலம் முதல் புலம் பெயர்ந்து வருகிறவர்களை வரவேற்று வந்திருக்கிற அமெரிக்காவின் மகத்தான பாரம்பரியம் மிதிக்கப்படுவது கண்டு சுதந்திரச் சிலையின் கன்னங்களில் கண்ணீர் வடிகிறது’ என்று டொனால்ட் டிரம்ப் பிறப்பித்துள்ள தடையாணைகள் குறித்து அந்நாட்டு நாடாளுமன்ற மேலவையின் சிறுபான்மையினர் பிரிவு தலைவர் சுக் ஷூமெர் இவ்வாறு கூறியிருக்கிறார்.

ஈரான், இராக், சிரியா, சூடான், லிபியா, யேமன், சோமாலியா ஆகிய 7 நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு 90நாட்கள் தடை விதித்திருக்கிறார் டிரம்ப். அடைக்கலம் தேடி வரக்கூடிய அகதிகளை அனுமதிப்பதற்கு 120 நாட்கள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பிட்ட காலம் முடிவடைகிறபோது இந்தத் தடைகள் நீட்டிக்கப்படலாம். அத்துடன், வெளிநாடுகளிலிருந்து வேலை வாய்ப்புகளுக்காக வருவோருக்கு எதிரான ஆணையும் விரைவில் பிறப்பிக்கப்படலாம்.

அமெரிக்காவின் மனித உரிமை அமைப்புகள் மட்டுமின்றி தொழில் நிறுவனங்களும் டிரம்ப் பின் நடவடிக்கையைக் கண்டித்துள்ளன. தேர்தல் பிரச்சாரத்தில், தான் வென்றால் இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று சொல்லியிருந்தார். அப்படிப் பேசியதன் மூலம், கடந்த கால அரசுகளின் கொள்கைகளால் வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களில் கணிசமானோரது ஏமாற்ற உணர்வை வெளிநாடு களிலிருந்து வேலைகளுக்காகவும், அகதிகளாகவும் வருகிறவர்களுக்கு எதிரானதாகத் திருப்பவும், தேர்தல் ஆதாயமாக மாற்றிக் கொள்ளவும் முடிந்தது. அடிப்படையான பொருளாதாரக் கொள்கைகள் எதையும் மாற்ற முடியாது என்ற நிலையில் வெளிநாட்டவர்கள் மீதான கோபமாக மாற்றுவது தீவிர வலதுசாரி களுக்கு எளிதான வழியாக இருக்கிறது.

முன்பு ஜார்ஜ் புஷ், உலக பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் என்பதாகக் கூறி, இஸ்லாமிய நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிரான பகையுணர்வு கட்டப்படுவதைத் தொடங்கி வைத்தார். இப்போது டிரம்ப் அதே போல், அமெரிக்க மண்ணில் வெளிநாடுகளிலிருந்து வருவோரின் பயங்கரவாதச் செயல்களைத் தடுக்கவே இந்த நடவடிக்கை என்கிறார். ஆனால் புஷ்சின் அன்றைய அறிவிப்பால் உலகில் பயங்கரவாதச் செயல்கள் சிறிதும் அடங்கவில்லை. இப்போது டிரம்ப்பின் அறிவிப்பும் பலனளிக்கப்போவதில்லை. மாறாக, பயங்கரவாத சக்திகள் தங்கள் பிடியில் சிக்கிய இளைஞர்களுக்குக் கொம்பு சீவிவிடு வதற்கு இதையும் ஒரு காரணமாகப் பயன் படுத்திக்கொள்வார்கள்.

ஐஎஸ், அல்கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் பலவும் அமெரிக்க அரசால் பால் வார்த்து வளர்க்கப்பட்டவையே என்பதை உலகம் அறியும். இராக், ஆப்கானிஸ்தான், சிரியா என அமெரிக்காவின் அத்துமீறல்களின் கோர விளைவுகளைத்தான் உலகம் இன்று சந்தித்துக்கொண்டிருக்கிறது. இது ஏதோ அமெரிக்காவின் உள்நாட்டுத் தேவை என்று விட்டுவிட முடியாது. அமெரிக்க விமானநிலையங்களில் இந்தியாவின் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம், திரைக்கலைஞர் ஷாருக் கான் உள்ளிட்டோரே கூட அவமதிக்கப்பட்ட நிகழ்வுகள் உண்டு. இந்தியாவிலும் மதவாதம் சார்ந்த அகதிகள் கொள்கையையும், புலம்பெயர்ந்தோர் கொள்கையையும் உருவாக்க மோடி அரசு முயன்றுவருவ தோடும் இதை இணைத்துப் பார்க்க வேண்டி யிருக்கிறது. மானுட நெறிகளுக்கு எதிரான இத்தகைய கொள்கைகளை உலகளாவிய மனிதநேய சக்திகள் முறியடித்தாக வேண்டும்.

Leave a Reply

You must be logged in to post a comment.