சண்டிகர், ஜன. 28 –

பஞ்சாப் மாநிலத்தில் இன்னும் ஒரு வார காலத்தில் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் , அம்மாநிலத்தின் ஜலந்தர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக்கூட்டத்தில்  பிரதமர் மோடி பங்கேற்று பேசினார். ஆனால் மோடியின் பொதுக்கூட்டத்திற்கு போதிய அளவு கூட்டம் வரவில்லை. வந்திருந்த மக்களும் ஆர்வம் காட்டாத நிலையில் இருந்தனர். இதனால் அகாலிதளம் – பாஜக கூட்டணி கலக்கம் அடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிகிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியை குற்றம்சாட்டி தனது உரையை தொடங்கிய பிரதமர் மோடி ,ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த ஊழல் விவகாரங்கள் மீது காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறினார். ஆனால் மிகப்பெரிய ஆதரவுடன் தனது கட்சி பதவிக்கு வந்த போது , காங்கிரஸ் மீது அவரது கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை கூற மறந்துவிட்டார்.

பின்னர் வாக்காளர்களிடம் தனது பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு ஆதரவளிக்க வேண்டுகோள் விடுத்த அவர் , பிரகாஷ் சிங் பதால் விவசாயிகளின் கடவுள் என கூறினார். மேலும் மார்ச் 11 இந்த தேர்தல் முடிவு வெளியான பிறகு அகாலி – பாஜக கட்சிகள் இணைந்து மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என கூறினார். ஆனால் அவரது உரை முடியும் முன்னரே மக்கள் அங்கிருந்து வெளியேற ஆரம்பித்துவிட்டனர். சாதாரணமாக பிரச்சாரத்தில் ஒரு பிரச்சாரத்திற்காக கூடும் கூட்டத்தை விட , பிரதமரின் பிரசாரத்தை கேட்க கூடிய கூட்டம்  மிக குறைவாகவே இருந்தது. இந்த முறை காங்கிரஸ் வெற்றி பெரும் எனவும், ஆம்ஆத்மி இரண்டாமிடம் பிடிக்க வாய்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: