சில்லாங், ஜன. 27 –

மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதன் (67) , தன் மீது எழுந்த பாலியல் குற்றச்சாட்டை அடுத்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு மே மாதம் மேகாலயா ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த  வி. சண்முகநாதன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவர் மீது பாலியல் குற்றம்சாட்டி ஆளுநர் மாளிகை ஊழியர்கள் சுமார் 100 பேர் பிரதமர் மோடிக்கும், குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்களுக்கும் புகார் கடிதம் அனுப்பினர். இந்நிலையில் சண்முகநாதன் வியாழனன்று இரவு தனது பதவியை ராஜினாமா செய்தார்.

Leave A Reply

%d bloggers like this: