தில்லி, ஜன. 27 –

மேகாலயா ஆளுநர் வி.சண்முகநாதனின் ராஜினாமாவை ஜனாதிபதி இன்று  ஏற்றுக்கொண்டார்.

மேகாலயாவின் ஆளுநராகவும் அருணாச்சல பிரதேசத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்து வந்தவர் ஆர்எஸ்எஸ்சின் முக்கிய பிரமுகர் வி.சண்முகநாதன் இருந்து வந்தார். இவர் பணிக்கு பெண்களை மட்டுமே நியமித்தார். உதவியாளாராக இருந்த ஒரே ஆண்பணியாளரையும் வேறு இடத்துக்கு இடமாற்றம் செய்தார். நேர்முகத்தேர்வுக்கு வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டார் , ஆளுநர் மாளிகையை ஒரு க்ளப் பாக மாற்றிவிட்டார் என்று  மீது பாலியல் குற்றம்சாட்டி , ஆளுநர் அலுவலக பணியாளர்கள் சுமார் 100 பேர் பிரதமர் மற்றும் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பினர்.

இந்நிலையில் சண்முகநாதன் தனது பதவியை வியாழனன்று இரவு ராஜினாமா செய்தார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சண்முகநாதனின் ராஜினாமாவை ஏற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து அசாம் ஆளுநர் பன்வரிலால் புரோகித்துக்கு மேகாலயா ஆளுநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் , நாகலாந்து ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவுக்கு கூடுதலாக அருணாச்சல பிரதேச ஆளுநர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.