பனாஜி, ஜன. 25 –

கோவா சிறையில் கைதிகள் சிறையை உடைக்க முயன்ற போது ஏற்பட்ட கலவரத்தில் கைதி ஒருவர் பலியானார். மேலும் 11 பேர் படுகாயமடைந்தனர்.

கோவா சதா கிளை சிறையில் செவ்வாயன்று இரவு 11 மணியளவில் கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட சண்டையில் கைதி ஒருவர் பலியானார். மேலும் சிறை அதிகாரி, இரு காவலர்கள் மற்றும் 9 கைதிகள் படுகாயம் அடைந்தனர். இந்த கலவரத்தை பயன்படுத்தி கைதிகள் சிலர் சிறை மதில் சுவரை தாண்டி தப்பிச் செல்ல முயன்றனர். இதில்  சிறையில் இருந்த பொருட்கள் அடித்து சூரரையாடப்பட்டது.

இந்த சிறையின் தற்போதைய நிலைமை கைதிகளை பாதுகாப்பதற்கு போதுமானதாக இல்லை என்பதால் இங்குள்ள கைதிகளை அருகாமையில் இருக்கும் கோல்வாலே சிறைக்கு மாற்றுவதாகவும், கோவா கவர்னர் மிருதுளா சின்ஹா கோல்வாலே சிறையின் பாதுகாப்பு அம்சங்களை இன்று (புதன்கிழமை) ஆய்வு செய்ய இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: