ஈரோடு:

ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடி வரும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களை பாஜக கட்சி உறுப்பினர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் பீட்டா போன்ற அமைப்பை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கடந்த 6 நாட்களுக்கும் மேலாக தமிழகம் முழுவதிலும் அறவழி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தற்காலிக அவசர சட்டத்தை தங்களுக்கு சாதகமாக்கும்  பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் 9 காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த ஈரோடு மாவட்டம் வீரப்பன்பாளையத்தில் ஒன்றுகூடினர். இதனை அறிந்த போராட்டக்காரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஜல்லிக்கட்டு நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாஜக உறுப்பினர்களுக்கு போராட்டக்காரர்களுக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.

இதனையடுத்து 4 இளைஞர்களை பாஜகவினர் தாக்கியுள்ளனர். இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இருப்பிரிவினரையும் சமாதானப்படுத்தி அனுப்பினர். இந்த சம்பவம் போராட்டக்காரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave A Reply