திருப்பூர்,
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு கோரியும், பீட்டா அமைப்புக்குத் தடை கோரியும் திருப்பூர் அருகே 63 வேலம்பாளையம் கிராம மக்கள் வெளிநாட்டு பானங்களுக்குத் தடை விதித்து கும்மியடித்துக் கொண்டாடினர்.
இனிமேல் 63 வேலம்பாளையத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களான கோக், பெப்ஸி வகைகளை விற்பதோ, வாங்கிக் குடிப்பதோ இல்லை என்று இந்த கிராம மக்கள் ஒரு மனதாக முடிவு செய்தனர். இதன்படி வெள்ளிக்கிழமை காலை இந்த கிராமத்தில் அனைத்து கடைகளிலும் விற்னைக்கு வைக்கப்பட்டிருந்த வெளிநாட்டு குளிர்பானங்களை மொத்தமாக விலைகொடுத்து வாங்கி ஊருக்கு மையத்தில் வைத்து பெண்கள் கும்மியடித்தனர். இனிமேல் உள்நாட்டு குளிர்பானங்கள் மட்டுமே விற்கப் போவதாக உள்ளூர் வியாபாரிகளும் தெரிவித்தனர். அத்துடன் ஜல்லிக்கட்டுக்குத் தடையை நீக்க வேண்டும் என வலியுறுத்தி குழந்தைகள் காளை மாடுகளுடன் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இளைஞர்கள், பெண்கள் உள்பட ஊர் மக்கள் பெரும் உற்சாகத்துடன் இதில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.