​திருப்பூர், ஜன.20 –

​தமிழகத்தின் பாரம்பரிய பண்பாட்டு விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்க வலியுறுத்தி நடைபெற்று வரும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து திருப்பூரில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர் மெயின் தொலைபேசி நிலையம் முன்பாக வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கக் கிளைத் தலைவர் வாலீசன் தலைமை வகித்தார். கிளைச் செயலாளர்கள் குமரவேல், விஸ்வநாதன், மாநில உதவிச் செயலாளர் எஸ்.சுப்பிரமணியம், எப்என்டிஓ மாநில உதவிச் செயலாளர் தனபதி, ஓய்வுபெற்றோர் சங்க மாநில அமைப்புச் செயலாளர் பா.சௌந்தரபாண்டியன் ஆகியோர் பேசினர். இதில் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தினர் திரளானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply