90 ஆயிரம் பேர் அமரும் வசதி கொண்ட உலகின் மிகப்பெரிய மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானம் உள்ளது.

இதை முறியடிக்கும் வகையில், இந்தியாவின் குஜராத் மாநிலம் மோதிராவில் உலகிலேயே மிகப் பெரிய கிரிக்கெட் மைதானத்தை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில், 1.10 லட்சம் இருக்கைகள் அமைக்கப்படுகிறது. மெல்போர்ன் மைதானத்தை வடிவமைத்த நிறுவனம்தான் இந்த மைதானத்தையும் வடிவமைக்கிறது. சுமார் 700 கோடி ரூபாய் செலவில் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.

புதிய மைதானம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா செவ்வாய்க்கிழமை(ஜன.17) நடைபெற்றது. விழாவில் குஜராத் கிரிக்கெட் சங்க துணைத் தலைவர் பரிமள் நத்வானி மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினர். இந்த மைதானத்தின் கட்டுமானப் பணிகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும் என குஜராத் கிரிக்கெட் சங்க துணைத்தலைவர் பரிமள் நத்வானி அறிவித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரின் மோதிரா பகுதியில் இருந்த சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் 54 ஆயிரம் பேர் மட்டுமே அமர்ந்துபோட்டிகளை பார்க்க முடியும். இந்த மிகப் பழமைவாய்ந்த உலகின் மிகப்பெரிய மைதானம் உருவாக்குவதற்காக சமீபத்தில் அந்த மைதானம் இடிக்கப்பட்டது.

 

Leave a Reply

You must be logged in to post a comment.