புதுதில்லி, ஜன. 13 –

நாடு முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இருந்து சுமார் ரூ. 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு நிதிமோசடி செய்ததாக, சஹாரா குழுமத் தலைவர் சுப்ரதாராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சுமார் இரண்டு ஆண்டுகளாக சுப்ரதா ராய் சிறையில் இருந்த நிலையில், அண்மையில், ரூ. 600 கோடி பிணைத்தொகை செலுத்துவதாக உறுதியளித்து, பரோலில் வெளியே வந்தார். ஆனால், சொன்னபடி அவர் இன்னும் பிணைத்தொகையை செலுத்தவில்லை. இந்நிலையில், வெள்ளியன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ரூ. 600 கோடியை பிப்ரவரி 6-ஆம் தேதிக்குள் சுப்ரதா ராய் செலுத்த வேண்டும்; இல்லாவிட்டால் அவர் மீண்டும் சிறைக்குத்தான் செல்ல வேண்டும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

Leave A Reply