மதுரை,

மதுரை மாவட்டம் கரிசல்குளத்தில் தடையை மீறி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருவதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கரிசல் குளத்தில் 3 காளைகளுடன் ஏராளமான இளைஞர்கள் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக மைதானத்தில் வாடிவாசல் அமைக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டை தொடர்ந்து வடமஞ்சுவிரட்டு போட்டியும் நடைபெற்று வருகிறது. கரிசல்குளத்தில் உள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு, வடமஞ்சுவிரட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மைதானத்திற்கு தற்போது 3 காளைகளுடன் ஏராளமான இளைஞர்கள் வந்துள்ளனர்.
வடமஞ்சுவிரட்டு
காளையின் கழுத்தில் 20 அடி நீளமுள்ள ஒரு கயிறை கட்டி அதனை சுற்றி அந்த மாடு விளையாட்டு காட்டும். இந்த வடமஞ்சுவிரட்டு போட்டி தான் தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க இப்பகுதியை சேர்க்க 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருக்கிறார்கள். குறிப்பாக இதுபோன்ற விளையாட்டுகளை உச்சநீதிமன்றம் ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருக்கிறது. கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், மதுரையில் இன்று முதல் முறையாக வாடிவாசல் வழியாக காளை அவிழ்த்துவிடப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தடையை மீறி நடைபெற்று வரும் இந்த போட்டி காரணமாக அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கூடல் நகர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply