கோவை, ஜன. 13 –
வைரத்தொழிற்சாலையை இடமாற்றம் செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தி கடந்த இரண்டு மாதகாலமாக போராட்டம் நடத்தி வருகிற டைமெக்சன் தொழிலாளர்கள் வெள்ளியன்று போராட்ட பொங்கல் வைத்து நூதன கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை சூலூர் அருகே செயல்படும் டைமெக்சன் வைரத்தொழிற்சாலையை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி டைமெக்சன் நிர்வாகம் நாற்பது கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள நரசிம்ம நாயக்கன் பாளையத்திற்கு இடமாற்றம் செய்தது.  இதனைக்கண்டித்து அனைத்து தொழிலாளர்களும் சிஐடியு தலைமையில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் தமிழர்களின் முதன்மை விழாவான பொங்கல் விழாவை போராட்டக்களத்தில் உள்ள தொழிலாளர்கள் வெகுவிமர்சையாக கொண்டாடினர். முன்னதாக நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் தொழிற்சாலையின் முன்பு பொங்கல் பானை வைத்து நெருப்பு மூட்டி போராட்ட பொங்கல் வைத்தனர். இந்நிலையில் போராட்ட பொங்கல் விழாவை கொண்டாடும் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சிஐடியு மாவட்ட பொருளாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி வாழ்த்தி உரையாற்றினார். போராட்டக்களத்தில் இருந்தாலும் பண்பாட்டு விழாவை ஒதுக்கிவைக்க முடியாது என்றும், போராட்டக்களத்தில் நின்று பொங்கல் வைப்பதால் இது போராட்ட பொங்கல் என்று முழக்கங்களை எழுப்பினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
படம் உள்ளது

Leave A Reply