புதுதில்லி,
ஜனவரி 14க்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க உச்ச நீதி மன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
ஜல்லிக்கட்டு வழக்கில் உச்ச நீதி மன்றம் விதித்துள்ள தடையை நீக்க தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. இந்நிலையல் நேற்று ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்க கோரிய பொதுநல வழக்கு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் உடனடியாக ஜல்லிக்கட்டுக்கான தீர்ப்பு வழங்க இயலாது என்று திட்ட வட்டமாக தெரிவித்தது. இந்நிலையில் இன்று தமிழக வழக்கறிஞர்கள் ஜனவரி 14க்குள் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டனர். ஆனால் ஜனவரி 14க்குள் ஜல்லிக்கட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க இயலாது என்று மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
வழக்கின் மற்றொரு அமர்வில் உள்ளபோது மீண்டும் உச்ச நீதி மன்றத்தில் முறையிட்டது ஏன் உச்ச நீதி மன்றம் வழக்கறிஞர்களிடம் கேள்வி எழுப்பி உள்ளது.

Leave A Reply