2008-ம் ஆண்டு சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி மற்றும் 2012-ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தி விளையாட்டுகளில் கலந்து கொண்டதாக சர்ச்சை எழுந்தது. இதுகுறித்து குற்றம்சாட்டப்பட்ட வீராங்கனைகளின் ரத்த மாதிரிகள் மறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளனர்.

இதில், 75 கிலோ பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற சீன வீராங்கனை காவ் லியி, 48 கிலோ பிரிவில் சென் க்ஸியெக்ஸியா மற்றும் 69 கிலோ பிரிவுகளில் தங்கம் வென்ற சீன வீராங்கனை லியூ சுன்ஹாங் ஆகியோரின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. இதேபோல், பெலாரஸ் நாட்டின் நட்ஸேயா உள்பட 8 வீரர்களின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்பட்டன.

பீஜிங் மற்றும் லண்டன் நகரில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் ஊக்க மருந்துகளை பயன்படுத்தி வெற்றிபெற்று பதக்கம் வென்றதாக இதுவரை 101 வீரர்-வீராங்கனைகளின் ஒலிம்பிக் பதக்கங்கள் பறிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவை தொடர்ந்து சீன வீரர்களின் மீது அடுத்த அம்புகள் பாய்ந்துள்ளது.

ஊக்க மருந்து விவகாரம், சீனா வீராங்கனைகள், ஒலிம்பிக், பதக்கம் பறிப்பு

divi theme free download nulled

Leave A Reply