பேராவூரணி, ஜன.12-

வறட்சியால் வேலை இழந்துள்ள விவசாய தொழிலாளர் குடும்பத்திற்கு ரூ. 10 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டுக்கோட்டை தலைமை தபால்நிலையம் அருகில் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வி.தொ.ச மாவட்டத் தலைவர் ஆர்.வாசு தலைமை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஆர்.சி.பழனிவேலு கண்டன உரையாற்றினார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் எம்.செல்வம் (பட்டுக்கோட்டை), ஏ.வி.குமாரசாமி (பேராவூரணி), கே.ராமசாமி (திருவோணம்), ஆர்.எஸ்.வேலுச்சாமி (சேதுபாவாசத்திரம்), நகரச் செயலாளர்கள் ஆர்.கந்தசாமி( பட்டுக்கோட்டை), கொன்றை வே.ரெங்கசாமி ( பேராவூரணி), வி.தொ.ச நிர்வாகிகள் கே.பெஞ்சமின், மதுக்கூர் ரெத்தினம், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். நூறு நாள் வேலைத்திட்டத்தை 200 நாளாகவும், கூலியை ரூ 400 ஆகவும் உயர்த்த வேண்டும். 5 மாத கால நிலுவைச் சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். அங்காடியில் வழங்கப்படும் அரிசியின் அளவை 30 கிலோவாக உயர்த்தி வழங்க வேண்டும்.

வறட்சி பாதிப்பினால் உயிரிழந்த விவசாயிகள் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்கிட வேண்டும். வறட்சியினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்படும் நிவாரண நிதியை கூடுதலாக வழங்கிட வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நூதனப் போராட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயத் தொழிலாளர்கள் கறுப்புக் கொடியுடனும், மண் சட்டியைக் கையில் ஏந்தியும், நாமம் அணிந்தும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம்

கும்பகோணம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் ஆர். தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். கும்பகோணம் ஒன்றிய நிர்வாகி ஆர்.நாகமுத்து, திருப்பனந்தாள் ஒன்றிய நிர்வாகி என்.நடசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியச் செயலாளர் ஜி.பக்கிரிசாமி, திருப்பனந்தாள் ஒன்றியச் செயலாளர் சாமிக்கண்ணு, சிஐடியு ஜீவபாரதி, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் செந்தில்குமார், ஒன்றியத் தலைவர் ராமன் உள்ளிட்ட விவசாயத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாநகர்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் தஞ்சாவூர் மாவட்டக்குழு சார்பில் தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் கறுப்புக் கொடியுடன், மண்சட்டி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் கே.பக்கிரிசாமி தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் வெ.ஜீவக்குமார், ஏ.செல்வராஜ், கே.அபிமன்னன், சம்சுதின், மாவட்டப் பொருளாளர் கே.மருதமுத்து, சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.செந்தில்குமார், என்.வி.கண்ணன், எம்.மாலதி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.தமிழ்ச்செல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Leave A Reply