கும்பகோணம், ஜன.12 –
ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு, எப்சி வழங்குவதை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைத்து, மோட்டார் தொழிலை அழிக்கும் மக்கள் விரோத மத்திய அரசைக் கண்டித்து கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு தஞ்சாவூர் மாவட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் (சிஐடியு) சார்பில் வியாழனன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆட்டோக்களுக்க எப்.சி கட்டணம், வாகனப் பதிவுக் கட்டணம், வாகனம் புதுப்பித்தல், கட்டணம் உரிமம் பெறும் கட்டணம், ஒப்பந்த கட்டணங்களை பல மடங்கு உயர்வு, இன்சுரன்ஸ் பிரீமிய உயர்வையும் ரத்து செய்ய வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆட்டோ தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஈ.எஸ்.ஐ. மருத்துவ திட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்களை சேர்க்க வேண்டும்.
மீனவர்களுக்கு வழங்குவது போல் ஆட்டோ தொழிலாளர்களுக்கும் மானிய விலையில் டீசல், பெட்ரோல், கேஸ் வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு மட்டுமே புதிய பர்மிட் வழங்க வேண்டும். ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலவாரிய பயன்களை காலம் கடத்தாமல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தபட்டன.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.ஜெயகுமார் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.சங்கர், மாவட்ட துணைத் தலைவர் கே.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.ஜெயபால் மாவட்டப் பொருளாளர் ம.கண்ணன் ஆகியோர் கண்ட உரையாற்றினர். கௌரவத் தலைவர் ஏ.ஜெயராஜ் சாலை போக்குவரத்து சங்க நகர்ச் செயலாளர் ஜெயம்பிள்ளை உள்ளிட்ட ஆட்டோ தொழிலாளர்கள் கண்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

திருச்சிராப்பள்ளி

வியாழனன்று காலை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்டோ ரிக்சா ஓட்டுநர் சங்க மாநகர் மாவட்டத் தலைவர் பக்ரூதீன்பாபு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் சம்பத், தலைவர் ரெங்கராஜன், பொருளாளர் ராஜேந்திரன். மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் வீரமுத்து. அமைப்பு செயலாளர் சந்திரன், மாநிலக்குழு உறுப்பினர் ஆட்டோ மணிகண்டன், சிபிஎம் ஜங்சன் பகுதிக்குழு செயலாளர் வெற்றிச்செல்வன் ஆகியோர் பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் கோபி நன்றி கூறினார்.

முன்னதாக காலை 10 மணிக்கு ஆட்டோ ரிக்சத ஓட்டுநர் சங்க பேரணி வெஸ்ட்ரி பள்ளி ரவுண்டானாவில் ஆரம்பித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை வந்தடைந்தது.

கரூர்

கரூர் ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் என்.ரெங்கராஜ் தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்ட துணைத் தலைவர் என்.ராஜீ ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சிஐடியு மாவட்டப் பொருளாளர் வி.சக்திவேல், ஆட்டோ சங்க மாவட்டப் பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட நிர்வாகிகள் ஆனந்த், மதியழகன், கணேசன், ராமகிருஷ்ணன், துரைசாமி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி ஆர்டிஓ அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சங்க மாவட்ட உதவி செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது தலைமை வகித்தார். சிஐடியு சங்க மாவட்ட துணை செயலாளர் கா.கந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர் ஆர்.குமரேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். சங்கத்தின் ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷமிட்டனர்.

Leave A Reply