திருச்சிராப்பள்ளி, ஜன. 12 –

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் பென்சனர் நல அமைப்பு சார்பில் திருச்சியில் 4வது நாளாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோருக்கு மாதாந்திரப் பென்சன் தொகை ஜன.12 ஆம் தேதி ஆகியும் வழங்காததை கண்டித்தும், பென்சன் தொகையை உடனே வழங்க வேண்டும், கழக பென்சனை அரசே ஏற்று நடத்த வேண்டும், மருத்துவக் காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்த வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் பென்சனர் நல சங்கம் சார்பில் வியாழனன்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மண்டல அலுவலகம் முன் 4வது நாளாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் சின்னசாமி, பென்சனர் நல சங்க தலைவர் ராஜகோபால் ஆகியோர் தலைமை வகித்தார். ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைப் பொதுச் செயலாளர் சண்முகம், பென்சனர் நல சங்க மாநில செயலாளர் மருதமுத்து ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பொருளாளர் நடராஜன், ராம்குமார், ராஜேந்திரன், சிவப்பிரகாசம், சேகர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

Leave A Reply