பிரபல பாடகி வைக்கம் விஜயலட்சுமியைத் தமிழ் ரசிகர்கள் நன்கு அறிவர். பிறவியிலேயே பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான இவர் தனது குறையைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் இசையில் கவனம் செலுத்தினார். தமிழில் கோடையில் மழை போல (குக்கூ), சொப்பன சுந்தரி நான் தானே (வீர சிவாஜி) உள்ளிட்ட 40க்கும் அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். கேரளத்தைச் சேர்ந்த விஜயலட்சுமிக்கும் பிரபல மலையாள இசையமைப்பாளர் சந்தோஷூக்கும் இந்த ஆண்டு மார்ச்சில் திருமணம் நடக்க இருக்கும் நிலையில் தனது பார்வைக்கான சிசிச்சையை அவர் தொடர்ந்து எடுத்துவந்தார். அதன் பயனாக அவருக்கு இப்போது மீண்டும் பார்வை திரும்பியுள்ளது. திருமணப் பெண்ணாக தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தனக்குப் பார்வை கிடைத்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் வைக்கம் விஜயலட்சுமி.
நாமும் அவருக்கு இரட்டிப்பு வாழ்த்துக்களைச் சொல்வோம்!

 

Leave A Reply