சென்னை:

சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தமிழர் திருநாளாம் பொங்கள் திருநாள் நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ளது. இதில் பொங்கள் பண்டிகையின் சிறப்பு என்று கருதப்படும் ஜல்லிக்கட்டு என்னும் வீர விளையாட்டுக்கு உச்சநீதி மன்றம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக பொது மக்கள், மாணவர்கள் என ஏராளமானவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவசர சட்டம் கொண்டு வந்து ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி சென்னை தி. நகரில் உள்ள பாஜக அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்ட முயன்றனர். இதனையடுத்து காவல்துறையினர் மாணவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் காவல்துறையினரிடம் வாக்குவாதம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave A Reply