முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான போட்டிகள் சென்னை வேளச்சேரி நீச்சல்குள வளாகத்தில் நடை பெற்றது. பள்ளிக் கல்வி, விளையாட்டு இளைஞர் நலத்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் துவக்கி வைத்து வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை ஆணையர் டாக்டர். ராஜேந்திர குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

100மீ பட்டர்பிளை ஆண்கள் பிரிவில் காஞ்சிபுரத்தை சேர்ந்த சி. எஸ். பி. பிரித்விராஜ் முதல் பரிசை பெற்றார்.சென்னை கவுதம் 2-ம் இடமும், திருவள்ளூர் எம். எஸ். பவன் குப்தா 3வது இடமும் பிடித்தனர்.

100மீ பட்டர் பிளை – பெண்கள் பிரிவில் சென்னை முக்தா மல்லா ரெட்டி முதலிடம், தூத்துக்குடி எஸ். மம்தா சிவதர்ஷினி, இரண்டாம் இடமும், திருநெல்வேலி எஸ். ஜி. தேவி மகராசி மூன்றாவது இடமும் பிடித்தனர்.

ஜன.15 முதல் 17 வரை தஞ்சாவூரில் பளுதூக்கும் போட்டியும், சென்னையில் ஜன.19 முதல் 21 வரைக்கும் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டும் நடைபெற்றது. ஜன.21 முதல் 23 வரை மதுரையில் தடகளமும், ஜன.25 முதல் 27 வரை ஜூடோவும், நாகையில் ஜன.27 முதல் 29வரை கடற்கரை கையுந்து பந்து போட்டியும் நடத்தப்படுகிறது. பிப். 1 முதல் 15 – ம் தேதிக்குள் பென்சிங் விளையாட்டுக்கள் நாமக்கல்லிலும் விருதுநகரில் குத்துச் சண்டையும் நடத்தப்படுகிறது.

 

Leave A Reply