சென்னை:
பொங்கல் பண்டிகையை தொடர்ந்து தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் வகையில் புகார் எண்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பொங்கள் பண்டிகை நாளை மறுநாள் (ஜன.14) கொண்டாடப்பட உள்ளது. இதனால் வெளியூர்களில் வேலை செய்யும் மக்கள் தங்கள் சொந்த ஊருகளுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இதில் ரயில்களில் முன்பதிவு டிக்கெட்டுகள் முடிந்ததால் பொது மக்கள் ஆம்னி பேருந்தில் செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் ஆமின் பேருந்து உரிமையாளர்கள் பேருந்து கட்டணத்தை பல மடங்கு அதிக விலையில் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில், தனியார் பேருந்துகளில் விதிகளை மீறி அதிக கட்டணம் வசூலித்தால் 1800 425 6151 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Leave A Reply