எல்லை பாதுகாப்பு படையில் மோசமான உணவு வழங்கப்படுவதாகவும், சில நேரங்களில் வெறும் வயிற்றோடு படுக்க செல்வதாகவும் குற்றம்சாட்டிய வீரரின் புகார் தொடர்பாக விசாரணை நடத்துமாறு மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார்.

இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரியும் எல்லைப் பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு வீரரின் பேச்சு அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ரேஷன் பொருட்களை பொதுமக்களிடம் பாதிவிலைக்கு ராணுவ அதிகாரிகள் விற்பதாக எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல் எரிபொருட்களையும் சந்தை விலையை விட பாதிக்கு விற்பதாக பொதுமக்கள் கூறியுள்ளனர். துணை ராணுவ படை வீரர்களின் முகாம்களுக்கு அருகில் வசிக்கும் மக்கள் இந்த குற்றச்சாட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Leave A Reply