அந்த டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை பேடிஎம், மொபிக்விக் உள்ளிட்ட மொபைல் வேலட்டுகள் மூலமாக செலுத்தும் வசதியும் இந்த புதிய செயலியில் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலியின் உதவியுடன் உபர் மற்றும் ஓலா உள்ளிட்ட நிறுவனங்களின் வாடகைக் கார்களையும் பயணிகள் பதிவு செய்து கொள்ள முடியும். ஏற்கனவே உள்ள வசதிகளுடன் இந்த புதிய வசதிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. டெல்லியில் நடந்த புதிய செயலியின் அறிமுக விழாவில் பேசிய ரயில்வேத் துறை அமைச்சர், டிஜிட்டலை நோக்கி நகர்ந்துவரும் அடுத்த தலைமுறையினருக்கு ஏற்ற வகையில் இ-டிக்கெட்டிங் சேவைகள் வழங்க அதிக பாதுகாப்பு வசதிகளுடன் இந்த செயலி அறிமுகப்படுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார். இந்த புதிய செயலி மூலம் ரயில்வேக்கு விளம்பர வருவாயும் அதிகரிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Leave A Reply