சண்டிகர், ஜன. 11 –

பஞ்சாப் மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அம்மாநில முதலமைச்சர் மீது ஷூ வீசப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலம் பதிந்தா பகுதியில் இன்று ஜனதா தர்பார் என்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதல் பங்கேற்றார். அப்போது , யாரும் எதிர்பாராத விதமாக , அவர் மீது ஷூ வீசப்பட்டது. அம்மாநில சட்டசபை தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு இதே போல் நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற பிரகாஷ் சிங் மீது ஷூ வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.