சென்னை, ஜன.11-
முஸ்லிம் பெண்களை மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் முறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.இது தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பதர் சயீத் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் படி ஆண்களுக்கு மூன்று முறை தலாக் சொல்லி விவாகரத்து செய்யும் உரிமை அளிக்கப்பட்டுள்ளது.

இது முஸ்லீம் பெண்களுக்கு எதிராக தன்னிச்சையாகப் பயன்படுத்தப்படுகிறது. இது முஸ்லீம் பெண்களுக்கு பெரும் பாதிப்பை எற்படுத்துகிறது. இது போன்ற பிரச்சனை மற்ற பெண்களுக்கு இல்லை. மற்ற மத பெண்களுக்கு இருக்கும் சட்ட ரீதியான உரிமைகள் கூட முஸ்லீம் பெண்களுக்கு வழங்கப்படுவதில்லை. நீதிமன்றம் வருவதற்கு முன்பு ஹாஜிகளுக்கு சட்ட ரீதியான உரிமை வழங்கப்பட்டிருந்தது. சிவில் நீதிமன்றங்கள் வந்த பிறகு அந்த உரிமை ரத்து செய்யப்பட்டுவிட்டது. முத்தலாக் சொன்னாலும் நீதிமன்றத்தில் தான் விவாகரத்து பெற வேண்டும். முஸ்லீம் ஹாஜிகளுக்கு தலாக் வழங்கும் உரிமை இல்லை. எனவே ஹாஜிகளுக்கு தலாக் வழங்க தடை விதிக்க வேண்டும்’’ என்று அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எம்.எம். சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவு வருமாறு: தலாக் சான்றிதழ் வழங்குவதால் பெரும் குழப்பம் ஏற்படுவ
தாகவும் அந்த சான்றிதழில் நேரம்மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. எந்த காரணத்திற்காக எந்த சூழ்நிலையில் தலாக் சொல்லி விவாகரத்து வழங்கப்படுகிறது என்பதற்கான எந்த தகவலும் இல்லை என்றும் மனுதாரர் சொல்கிறார். ஆனால் முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம், “தலாக் என்பது அந்த ஹாஜியின் தனிப்பட்ட கருத்து தான். தலாக் சான்றிதழில் தான் பிரச்சனை உள்ளது. எனவே அந்த சான்றிதழை மாற்றி தலாக்கிற்கான காரணங்களை சேர்க்க பரிசீலனை செய்து வருவதாக தெரிவிக்கிறது.

ஹாஜிகளுக்கு எந்த அளவு சட்டஉரிமை இருக்கிறது என்பது முஸ்லீம் ஹாஜி சட்டம் 1880 பிரிவு 4 இல் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருக்கு மதச் சடங்கு செய்யும் உரிமை மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. எனவே ஹாஜிகளுக்கு எந்த விதசட்டரீதியான உத்தரவும் பிறப் பிக்க உரிமையில்லை. முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் தலாக்சான்றிதழில் மாற்றம் கொண்டுவரப்போவதாகத் தெரிவித்துள் ளது. எனவே இது தொடர்பான அடுத்த உத்தரவு வரும் வரை ஹாஜிக்கள் தலாக் சான்றிதழ் வழங்க இடைக்கால தடை விதிக்கிறோம். மேலும், ஹாஜிக்கள் வழங்கும் தலாக் சான்றிதழ்களுக்கு எந்த விதமான நிர்வாக மற்றும் சட்ட ரீதியான உரிமையில்லை என்றும் ,அது ஹாஜிக்களின் தனிப்பட்ட கருத்தாகவே கருதப்படும் என்றும் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் உயர்நீதிமன்றப் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என்று உத்தரவிடுகிறோம். வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 21 ஆம் தேதி நடைபெறும் .இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: