தில்லி, ஜன. 10 –

தில்லியை சேர்ந்தவர்கள் சோனி பிரசாத் மற்றும் ஜம்னா தம்பதி. இவர்களுக்கு ஆதித்யா ராஜ் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை உள்ளார். கடந்த டிச.31 ஆம் தேதி முதல் ஆதித்யா ராஜை காணவில்லை. இந்நிலையில் அவர்களது வீட்டருகே பாதி முகம் சிதைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆதித்யா ராஜ் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது தான் ஆதித்யா ராஜின் தாயாரான சோனி பிரசாத்தை , கோவிந்த தாஸ் என்ற வாலிபர் , குடும்பத்தை விட்டு பிரிந்து வந்து தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு மிரட்டியது தெரியவந்தது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதிகள் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்தனர். இருப்பினும் தொடர்ந்து வலியுறுத்தி வந்த கோவிந்த தாஸ் , ஆதித்யா ராஜை கடத்திகொண்டு போய் முகத்தில் ஆசிட் வீசியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து காவலர்கள் கோவிந்த தாஸை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave A Reply